News August 5, 2024
பால் குடிப்பது ஆபத்தானதா?

தாய்ப்பால் அல்லாத மற்ற உயிரினங்களின் பாலில் உள்ள வேதிப் பொருட்களை மனித உடல் செரிமானம் செய்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனால், பல ஆண்டு காலமாக மனிதன், பசும்பாலை அருந்தி வருவதால் பெரும்பாலானோருக்கு அலர்ஜி ஏற்படுவதில்லை. மேலும், பாலில் கால்சியம் உள்ளிட்ட பல முக்கிய நன்மை செய்யும் சத்துக்கள் இருப்பதால், பால் மற்றும் பால் தொடர்பான உணவுகளை சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News January 15, 2026
காஞ்சிபுரம்: கணவன் தொல்லையா? உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
வீல்சேரில் முடங்கிய பிரபல காமெடி நடிகர்!

தனது காமெடி டைமிங் & சிறப்பான நடிப்பால் மலையாள சினிமாவை கட்டியாண்ட ஜகதி ஸ்ரீகுமாரின் நிலை, நம்மை கலங்கச் செய்கிறது. 1500+ படங்களுக்கு மேல் நடித்துள்ளவரின் வாழ்க்கையை 2012-ல் நிகழ்ந்து கார் விபத்து புரட்டி போட்டு விட்டது. 5 தலைமுறைகளை கவர்ந்த அவர், இன்று பேசும் திறனை இழந்து, தற்போது வீல்சேரில் முடங்கியுள்ளார். மலையாளத்தில் உச்சம் தொட்டவர், தமிழில் ‘ஆடும் கூத்து’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
News January 15, 2026
பொங்கல் அன்று இதை செய்தால் அதிர்ஷ்டம் கொட்டும்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்னை சரியாக ஐதீகம் சில வழிமுறைகளை சொல்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், கோயிலுக்கோ அல்லது ஏழைகளுக்கோ சுத்தமான நெய் மற்றும் வெல்லத்தை தானமாக வழங்கலாம். வெல்லம் சூரியனுடனும், நெய் சுபிட்சத்துடனும் தொடர்புடையது. இந்த தானம் உங்கள் செல்வத்தை மேம்படுத்தும் என்கின்றனர். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


