News February 12, 2025
டான் படத்தின் காப்பியா டிராகன்?

‘டிராகன்’ படம் கண்டிப்பாக ‘டான்’ படத்தின் காப்பி இல்லை என அப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விளக்கமளித்துள்ளார். 2 ஆண்டுக்கு முன் வந்த படத்தை எப்படி அப்படியே காப்பி அடிக்க முடியும் எனவும், டிரெய்லர் கட்ஸ் வேண்டுமானால், அப்படத்தை ஞாபகப்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், டிராகன் படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
1,000 ஆண்டுகளாக பெண்களை அனுமதிக்காத விசித்திர நகரம்!

இக்காலத்திலும் இப்படி ஒரு இடமா என அதிர்ச்சியுடன் கேட்கும் அளவிற்கு உள்ள இடம் தான் மவுண்ட் ஏத்தஸ். கீரிஸில் உள்ள இத்தீபகற்பத்தில் கடந்த 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு அனுமதி கிடையாதாம். ஏன் பெண் விலங்குகளுக்கு கூட அங்கு தடை உள்ளது. கிழக்கு மரபுவழி கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான ஆன்மிக மையமாக கருதப்படும் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சமையலால் மாமியாருடன் சண்டை.. மருமகள் தற்கொலை

பெங்களூருவை சேர்ந்த சுஷ்மா(35) புனித் தம்பதிக்கு 4 வயது மகன் உள்ளார். சுஷ்மாவிற்கும் மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் சண்டை ஏற்பட, மனமுடைந்த சுஷ்மா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வரதட்சணைக்காக அவரை கொடுமைப்படுத்தியதாக பெண் வீட்டார் குற்றம்சாட்ட, தற்போது புனித் கைது செய்யப்பட்டுள்ளார். மாமியார் தலைமறைவாகியுள்ளார்.
News March 4, 2026
இந்தி பெயருக்கு அதிகாரிகளே காரணம்: தமிழிசை

திருச்சி ரயில் நிலையத்தின் புதிய நுழைவாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என பெயரிடப்பட்டுள்ளதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியில் உள்ள பெயரை தமிழில் மாற்ற ரயில்வே துறை அமைச்சருக்கு தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரிகள் செய்த தவறுக்கு மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


