News July 28, 2024
மக்களிடையே திமுக பிளவை ஏற்படுத்துகிறதா?

சிறந்த கடல் வளங்களைக் கொண்ட தமிழகத்திற்கு, ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு பயன்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். . பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு அளிக்கப்படுகிறதெனக் குறிப்பிட்ட அவர், மக்களிடையே பிரதேச அடிப்படையில் பிளவை உருவாக்கும் வகையில், திமுக அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக விமர்சித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்: விஜய்

விவகாரத்து வழக்கு, CBI விசாரணை என பல நெருக்கடிகள் இருந்தாலும் கட்சி பணியையும் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, பனையூர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களிடம் விஜய் இன்று நேர்காணல் நடத்தியுள்ளார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்றும் இனி அரசியலைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை எனவும் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 10, 2026
உங்களுக்கு Overthinking பிரச்னை இருக்கா?

Overthink செய்வதால், நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு மனரீதியிலான பிரச்னைகள் மட்டுமின்றி உடல் சோர்வு, தலைவலி, செரிமான பிரச்னை போன்றவை உண்டாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையிலிருந்து விடுபட தியானம் செய்யவும், மனதில் எதையும் அழுத்தி கொள்ளாமல் வெளிப்படையாக பேசவும் மனநல டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், Overthink பிரச்னை இருப்பவர்களுக்கு பாடல்கள் கேட்பதும் ஹெல்ப் பண்ணுமாம்.
News March 10, 2026
மது அருந்துவதில் எந்த மாநிலம் டாப் தெரியுமா?

பரவலாக மக்களிடம் எதிர்ப்பு இருந்தாலும், மது விற்பனை என்னவோ குறையவே இல்லை. கடந்த நிதியாண்டில் அதிகமாக மது விற்பனையான டாப் 10 மாநிலங்களின் பட்டியலை IMFL(Indian Made Foreign Liquor) வெளியிட்டுள்ளது. போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும். விற்கப்பட்ட மதுபான பெட்டிகளின் (1 பெட்டி = 12 பாட்டில்கள்) அடிப்படையில் இப்பட்டியல் வரையறை செய்யப்பட்டுள்ளது.


