News March 28, 2025
திமுக கூட்டணியை நோக்கி நகர்கிறதா தேமுதிக?

தேமுதிகவின் அண்மைக்கால நகர்வுகள் DMK கூட்டணியில் சேருவதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ராஜ்யசபா சீட்டு விவகாரத்திலிருந்து அதிமுகவுடன் சற்று விலகியிருக்கும் பிரேமலதா விஜயகாந்த், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். குறிப்பாக நேற்று முன்தினம் சென்னையில் நடந்த என்கவுன்டரை பாராட்டியதைக் கூட, பலரும் கூட்டணி கணக்கு என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 31, 2025
உலகம் போற்றும் பிரதமரை விமர்சிப்பதா? சரத்குமார்

உலகம் போற்றும் பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, விஜய் கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என சரத்குமார் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் பிரதமரை சர்வதேச தலைவர்கள் வியந்து பாராட்டி வருவதாகவும், எதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கான நிதியை விடுவிக்காமல் உள்ளது என்பதன் உண்மை காரணத்தை அறிந்து விஜய் பேசியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 31, 2025
1 – 5ஆம் வகுப்பு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம்

கோடை வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி மாணவர்களின் இறுதித் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. 1- 5ஆம் வகுப்புகளுக்கு ஏப்.7 – 17ஆம் தேதி வரை முன்கூட்டியே தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில், 1- 3ஆம் வகுப்புகளுக்கு காலை 10- 12 மணி வரையிலும், 4, 5ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 – மாலை 4 மணி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 7, 8, 9 மற்றும் 11ஆம் தேதியே தேர்வுகள் நிறைவடைகிறது.
News March 31, 2025
நடப்பு IPL தொடரில் முதல் பவுலர்..!

நடப்பு IPL தொடரின் முதல் மெய்டன் ஓவரை RR அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் வீசியுள்ளார். CSK அணிக்கு எதிரான முதல் ஓவரிலேயே அவர், 1 விக்கெட் மெய்டன் ஓவரை வீசி அசத்தினார். தனது 2வது ஓவரிலும் அவர் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முதல் போட்டியில் 74 ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சரின் இந்த கம்பேக்கை பலரும் பாராட்டி வருகின்றனர். நேத்து யாரெல்லாம் மேட்ச் பாத்தீங்க?