News March 18, 2025
திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக?

மாநிலங்களவை எம்பி சீட் தொடர்பாக வாக்குறுதி அளிக்கவில்லை என இபிஎஸ் கூறியதால் பிரேமலதா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிரேமலதா பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 விவகாரங்களையும் முடிச்சு போடும் கட்சியினர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும், 2 கட்சிகளும் கூட்டணி வைக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
Similar News
News September 21, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் இடி, மின்னலுடன் மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விழுப்புரம், நெல்லை, குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News September 21, 2025
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

கிராம்பு டீ குடிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுவாசக் கோளாறுகள் நீங்கும் என சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி, அதில் 2 அல்லது 3 கிராம்புகளைச் சேர்த்து கொதிக்க விடுங்கள் *இந்த தண்ணீர் ஒரு கப் அளவுக்கு வற்றி வரும் வரை கொதிக்க விடவும் *பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது நேரம் ஆற விடுங்கள் *ஆறியதும், சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம்.
News September 21, 2025
DMK- TVK இடையே தான் போட்டி: விஜய் சொல்வது உண்மையா?

2026-ல் DMK-TVK இடையே தான் போட்டி என்று விஜய் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். திரும்ப திரும்ப இதை சொல்வதன் மூலம், திமுகவுக்கு நிகரான சக்தியாக அவர் தன்னை காட்ட முயல்கிறார். அதேநேரம், விஜய்யின் பேச்சுகளுக்கு CM உள்பட, திமுகவினர் உடனடி வினையாற்றுகின்றனர். அப்படியானால், தவெகவை திமுக போட்டியாக நினைக்கிறதா? நிச்சயம் இல்லை. அதிமுகவை பலவீனமாக காட்டவே திமுக இந்த உத்தியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.