News April 15, 2025
பாஜகவுடன் நெருங்குகிறதா தேமுதிக?

பிரதமரை பிரேமலதா விஜயகாந்த் புகழ்ந்ததும், பதிலுக்கு விஜயகாந்த் பற்றி நெகிழ்ச்சியாக பிரதமர் பேசியதும் தான் தமிழக அரசியலில் நேற்று ஹாட் டாபிக்கானது. இந்தச் சூழலில் பதிலுக்கு #BJP4India என குறிப்பிட்டு பிரதமருக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருக்கும் நிலையில், தேமுதிகவும் கூட்டணி சேர காய்களை நகர்த்துகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Similar News
News April 16, 2025
கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு காயம்

DCக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து RR கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். 189 என்ற இலக்கை துரத்திய அவர், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 5.3ஆவது பந்தில் காயம் ஏற்பட்டது. விப்ராஜ் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக வந்ததால், அதனை ஓங்கி அடித்தபோது சாம்சனுக்கு வலி ஏற்பட்டு வெளியேறினார்.
News April 16, 2025
நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்

2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த சின்னதுரையை வேறு சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பழகிய சிலர், அவரை தனியாக வரவழைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னதுரை ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News April 16, 2025
மோசமான சாதனையில் இணைந்த சந்தீப் சர்மா

ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா இணைந்துள்ளார். DC-க்கு எதிரான இன்றைய போட்டியில் 20-வது ஓவரை வீசும்போது 4 வைட், ஒரு நோபாளுடன் சேர்த்து 11 பந்துகளை அவர் போட்டுள்ளார். ஏற்கெனவே முகமது சிராஜ், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி இந்த பட்டியலில் உள்ளனர்.