News April 27, 2025
தள்ளிப்போகிறதா CUET UG 2024 தேர்வு?

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான CUET UG நுழைவுத் தேர்வின் 2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு உத்தேசமாக மே 8 முதல் ஜூன் 1-க்குள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த தேர்விற்கான அட்டவணை தற்போது வரை வெளியாகவில்லை. அதேநேரம், மே 4-ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால், CUET தேர்வு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 5, 2025
அன்பே சிவம், அறிவே பலம்: கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள MP கமல்ஹாசன்,
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது தான் என்று கூறியுள்ளார். மேலும், பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘அன்பே சிவம், அறிவே பலம்’ என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
News December 5, 2025
விஜய் கட்சியில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். அண்மைக் காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர், தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். செங்கோட்டையனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
2026 தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்சியாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாதக அறிவித்துள்ளது. கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேட்டூரில் வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீமான் போட்டியிடும் தொகுதி குறித்த விவரம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.


