News June 28, 2024
CBI விசாரணை கேட்க தகுதி இருக்கிறதா?: நேரு

ஜெயலலிதா மரணத்தில் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட இபிஎஸ்-க்கு, கள்ளக்குறிச்சி விஷச்சாயார விவகாரத்தில் CBI விசாரணை கேட்க தகுதி இருக்கிறதா என்று அமைச்சர் K.N.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் நம்பிக்கையை இபிஎஸ் இழந்துவிட்டதாகக் கூறிய அவர், அரசியலில் தனது இருப்பை தக்க வைக்க முதல்வர் ஸ்டாலினை ராஜினாமா செய்ய வேண்டும் என வீராவேசம் காட்ட முயற்சிக்கிறார் என்றார்.
Similar News
News November 27, 2025
காரைக்கால்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

காரைக்கால் நகராட்சி ஆணையர் செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, பன்றி வளர்ப்போர், தங்கள் பெயர், விலாசம், வளர்க்கப்படும் பன்றிகளின் எண்ணிக்கை, வளர்க்கும் இடம் ஆகிய தகவல்களை உரிய சான்றுகளுடன், நகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் பிடிபடும் பன்றிகள் தரப்படமாட்டாது. மேலும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறியுள்ளார்.
News November 27, 2025
அழுகிய பழங்களை சாப்பிட்டு.. WC கேப்டனின் சோகம்!

கிரிக்கெட் என்றாலே காசு கொழிக்கும் விளையாட்டு என கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். WC-யை வென்ற இந்தியா பெண்கள் பார்வையற்றோர் அணியின் கேப்டன் தீபிகாவின் கருத்துக்கள் நம்மை அதிர வைக்கிறது. அவர் சிறுவயதில் அழுகிய பழங்களின் கெட்ட பாகங்களை நீக்கிவிட்டு மீதியை சாப்பிட்டு வளர்ந்ததாக கூறினார். இது அணியின் அனைத்து வீரர்களும் எதிர்கொண்ட நிலைதான் என்ற அவர், அதில் தற்போதும் பெரிய மாற்றம் இல்லை என தெரிவித்தார்.
News November 27, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

கடந்த மூன்று நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹94,160-க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹11,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியதால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


