News December 16, 2024

கடைசி நேர உத்தியைப் பயன்படுத்தும் பாஜக?

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்திருத்த மசோதா அடுத்த வார இறுதியில் மக்களவையில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அலுவல் அட்டவணையில் இருந்து இம்மசோதா நீக்கப்பட்டுள்ளதால், இன்று தாக்கலாக வாய்ப்பில்லை. எனினும், சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணைப் பட்டியல் மூலம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. அமளியைத் தவிர்க்க பாஜக கடைசி நேர உத்தியைப் பயன்படுத்தக் கூடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News August 30, 2025

சற்றுமுன்: இன்று ஒரே நாளில் ₹3000 உயர்வு … புதிய உச்சம்

image

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹134-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹1,34,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கடந்த 20-ம் தேதி ₹73,440-க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ₹3520 (2 நாளில் மட்டும் ₹1720) அதிகரித்து இன்று ₹76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 30, 2025

ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் கிடையாது: அரசு

image

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவர். அதேநேரம், விசாரணை முடிவுற்ற பிறகே பணப் பலன்களை பெற முடியும் என்றும் கூறியுள்ளது.

News August 30, 2025

BREAKING: தமிழகத்தில் 3 இடங்களில் CBI ரெய்டு

image

சென்னையில் மீனம்பாக்கம், பூக்கடை மற்றும் செங்கல்பட்டில் CBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தங்க நகை வியாபார முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், இதில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

error: Content is protected !!