News January 24, 2025
அதிமுகவை மிரட்டுகிறதா பாஜக?

இபிஎஸ் உடன் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும், IT ரெய்டுக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை என <<15232192>>நயினார் நாகேந்திரன்<<>> பேசியுள்ளது மிரட்டும் தொணியில் உள்ளதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதோடு, நயினாரின் இந்த பேச்சு, கூட்டணி கதவை அடைத்துள்ள அதிமுகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக வார்னிங் எனக் கூறும் அரசியல் விமர்சகர்கள், வரும் நாட்களில் பல வழிகளில் அவர்களுக்கு நெருக்கடி வரலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
வயிறு முட்ட சாப்பிடும் ஆளா நீங்க? அப்போ இது முக்கியம்

சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அந்த உணவானது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் இரவில் தூக்கம் வருவதும் கடினம். இதற்கு ஒரே தீர்வு ஒரு கிளாஸ் சூடான நீர்தான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாதாம். சிறிது இடைவெளி விட்டு குடித்தால் செரிமானம் இலகுவாக இருக்குமாம். மூக்கு முட்ட சாப்பிடும் உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க.
News November 19, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: மும்பையில் சிக்கிய மூவர்

டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக மும்பையை சேர்ந்த 3 பேரை பிடித்து NIA விசாரித்து வருகிறது. முதல்கட்ட விசாரணைக்கு பின் மூவரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பிரத்யேக தகவல் தொழில்நுட்ப செயலி மூலம் இவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களிலும் NIA தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.
News November 19, 2025
பாரதியார் பொன்மொழிகள்

*விழும் வேகத்தை விட, எழும் வேகம் அதிகமாக இருந்தால். தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.


