News February 28, 2025
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு கட்டாயம்?

புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க, அவர்களின் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்க அரசுக்கு 5ஆவது காவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் கான்டிராக்டர்களின் பயோ மெட்ரிக்கையும் பதிவிட வேண்டும், அவர்களுக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் அடையாள சான்றுகளை வாங்கி காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Similar News
News February 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 192
▶குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
▶பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
News February 28, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோவா வென்றது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
News February 28, 2025
இன்றைய (பிப். 28) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 28 ▶மாசி – 16 ▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 AM
▶குளிகை: 07:30 AM- 09:00 PM
▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம்
▶நட்சத்திரம் : சதயம் ம 3.04