News April 12, 2024

அஞ்சு குரியன் – தர்ஷன் ஜோடிக்கு திருமணமா?

image

‘கனா’ படத்தில் நடித்து பிரபலமானவர் தர்ஷன், நடிகை அஞ்சு குரியனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. அவர்கள் திருமணம் செய்தது மாதிரியான புகைப்படங்களும் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன. ஆனால், அது நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

Similar News

News January 15, 2026

டிரம்புக்கு ஈரான் நேரடியாக கொலை மிரட்டல்

image

ஈரானில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிகை எடுக்க நேரிடும் என எச்சரித்தார். இந்நிலையில், ஈரான் அரசு டிவி, 2024-ம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘இந்த முறை இலக்கை தோட்டாக்கள் தவற விடாது’ என நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

News January 15, 2026

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிவு தலைகீழாக மாறியது

image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளும், காளையர்களும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், காளையர் பாலமுருகன் ஒரே சுற்றில் (9-வது) 18 காளைகளை அடக்கி அரங்கையே அதிர வைத்துள்ளார். இதனால் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாற 16 காளைகளை அடக்கிய கார்த்தி 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். சீறும் காளைகளும் திமிலில் திமிர் காட்ட, பாய்ந்து அடக்கிய வளையங்குளம் பாலமுருகனுக்கு வாழ்த்துகள் குவிகிறது.

News January 15, 2026

பொங்கல் நாளிலும் கைது நடவடிக்கையா? அன்புமணி

image

உரிமைக்காக போராடிய <<18857511>>பகுதிநேர ஆசிரியர்களை<<>> பொங்கல் நாளிலும் போலீசார் கைது செய்து, தனி இடத்தில் அடைத்துள்ளதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது எனக்கூறிய அவர், உடனே ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கவும், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!