News September 1, 2025
NDA கூட்டணியில் அமமுக இல்லையா? டிடிவி சூசகம்

NDA கூட்டணியில் இருக்கிறீர்களா, இல்லையா? என்று டிடிவி-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த கேள்வியை நயினார் நாகேந்திரனிடமே கேளுங்கள்; அவர் பதிலளித்தால் எங்களுக்கும் நன்றாக இருக்கும் என TTV தெரிவித்துள்ளார். OPS போலவே TTV-ஐ சேர்க்க முடியாது என்பதில் EPS விடாப்பிடியாக இருப்பதும், இதன்பின்னணியில் விஜய் தனி கூட்டணி அமைப்பது குறித்து TTV பேசியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 1, 2025
இந்தியாவில் சாதி மோதலை தூண்ட முயலும் அமெரிக்கா?

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் பிராமணர்கள் பயனடைகிறார்கள் என டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவாரோ சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். மேலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா மறைமுக நிதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது, USA-வின் வரி விதிப்பிற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினைகளை தாங்க முடியாமல், சாதி கலவரத்தை தூண்ட முயலும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
News September 1, 2025
உங்கள் மகளுக்கு 21 வயதில் ₹60 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்

பெண் பிள்ளை வைத்திருப்போரின் பெரிய கவலையே எப்படி அவர்களுக்கு பணம்/நகை சேர்ப்பது என்பதுதான். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது அதிகபட்சமாக ₹69,27,578 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தில் ₹250 – ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உங்கள் குழந்தைக்கு 10 வயது முடிவதற்குள் அருகில் இருக்கும் வங்கியை அணுகி இத்திட்டத்தில் சேருங்கள். SHARE.
News September 1, 2025
BJP கட்டுப்பாட்டில் EC: திருமா

தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜக, சங் பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டிலும் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என சந்தேகத்தை எழுப்பிய அவர், 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவியை பறிக்கும் சட்டத் திருத்தம் பாசிசத்தின் உச்சம் என்றும் சாடினார். மேலும், திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் போராட்டத்தில் தான் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.