News June 8, 2024
உ.பி.யில் பாஜக பின்னடைவுக்கு அமித் ஷா காரணமா?

கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் உ.பி.,யில் வெற்றிக் கொடி நாட்டிய பாஜக, இந்த முறையும் நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், 80 தொகுதிகளில் 33இல் மட்டுமே பாஜக வென்றது. சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6இல் வென்று அதிர்ச்சியளித்தன. இந்த பின்னடைவுக்கு, தேர்தலுக்கு முன்பு அனுபவம் வாய்ந்த 35 தலைவர்களை வேட்பாளராக்க ஆதித்யநாத் பரிந்துரைத்ததாகவும், அதை அமித் ஷா நிராகரித்ததும் காரணமாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 24, 2025
இனி மழைக்கும் தனி கட்டணம்.. வந்தாச்சு ‘Rain fee’

Swiggy & Zomato டெலிவரி App-ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘Rain fee’ கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி முதல் டெலிவரி சேவைகளுக்கு 18% GST அமலானதை தொடர்ந்து, இந்த சேவை கட்டணத்தை Swiggy சேர்த்துள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். மேலும், GST-யால் இனி ‘வெயில் Fee’, ‘ரோடு பள்ளம் Fee’ போன்றவையும் வந்துவிடும் எனவும் சிலர் கிண்டலடித்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News September 24, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு CBI-க்கு மாற்றம்

BSP கட்சியின் மறைந்த முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI-க்கு மாற்றி சென்னை HC உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை CBCID விசாரித்து வந்த நிலையில், கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் CBCID உடனடியாக ஆவணங்களை CBI-யிடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 24, 2025
மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தரகர்கள் எல்லாம் தலைவர்களாகி விட்டதால் நாட்டில் இஷ்டத்திற்கு வரி விதிக்கப்படுவதாக சீமான் சாடியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களின் சுமை குறையும் என்கிறார்கள். ஆனால் தொடக்கத்தில் இந்த வரியை விதித்தது யார்? ஜிஎஸ்டி வரி மக்களுக்கு சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியென்றால் மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.