News July 5, 2025
அஜித் உயிருக்கு ₹5 லட்சம் தான் மதிப்பா? சீமான் ஆதங்கம்

அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு வரும் 8-ம் தேதி நாதக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ₹10 லட்சம் கொடுக்கும் அரசு, காவலர்கள் அடித்து கொன்றால் ₹5 லட்சம் தான் தருகிறது என விமர்சித்த அவர் அவ்வளவு தான் உயிருக்கு மதிப்பா? என கேள்வி எழுப்பினார். மேலும், நிகிதா கைது செய்யப்படும்வரை தொடர்ந்து போராடுவேன் எனறும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
டாக்டரின் அலட்சியம்… ஆணுறுப்பை இழந்த இளைஞர்!

அசாமில் சிகிச்சைக்காக சென்ற இளைஞரின் ஆணுறுப்பை டாக்டர் தவறுதலாக அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிகுர் ரஹ்மான்(28) என்பவருக்கு ஆணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டதால், அதை பரிசோதிக்க சிறிது சதையை எடுப்பதற்கு பதிலாக ஆணுறுப்பையே அகற்றிவிட்டார் டாக்டர். மயக்கம் தெளிந்த பிறகே இளைஞருக்கு உண்மை தெரிந்துள்ளது. வாழ்க்கையே முடிந்துவிட்டது என ரஹ்மான் வேதனையில் இருக்கிறார். ரொம்ப பாவம்..!
News July 5, 2025
அதிமுக பற்றி ஏன் விஜய் பேச மறுக்கிறார்? திருமா கேள்வி

தவெக செயற்குழு கூட்டம் நேற்று விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என விஜய் தெரிவித்தார். இது பற்றி பேசிய திருமா, திமுக பற்றி பேசிய விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன் என தெரியவில்லை என்றார். த.வெ.க.வின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக உள்ளதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை விஜய் விமர்சிக்கிறாரே தவிர கொள்கை எதிரியாக குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.
News July 5, 2025
என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன்: EPS

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை தொடங்கிவைத்த ஸ்டாலினிடம் ‘இபிஎஸ் வீட்டிற்கு செல்வீர்களா’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நிச்சயம் செல்வன் என்று பதிலளித்தார். இன்று இதுகுறித்து இபிஎஸ்ஸிடமும் செய்தியாளர்கள் இதே கேள்வியை எழுப்பினர். அதற்கு, என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.