News January 23, 2025
கூட்டணிக்காகவா அதிமுக இடங்களில் சோதனை?

இபிஎஸ் உறவினர் இடத்தில் அண்மையில் ED சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவுக்கு நெருக்கடி தரவே மத்திய அரசு இதுபோல் செய்வதாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து அக்கட்சி MLA நயினார் நாகேந்திரனிடம் கேட்கப்பட்டது. கூட்டணிக்காக சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை, இபிஎஸ்சுடன் பேசினாலே சரி என்று விடுவார் என்றார்.
Similar News
News November 23, 2025
காதுகேளாதோர் ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை சாதனை

டோக்கியோ காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை மஹித் சந்து, 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் பெறும் 4-வது பதக்கம் இது. ஏற்கெனவே, கலப்பு 10மீ பிரிவில் ஒரு தங்கம், 2 தனிநபர் பிரிவுகளில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
News November 23, 2025
மெட்ரோ திட்டத்தை வைத்து அரசியல்: அண்ணாமலை

கோவை – மெட்ரோ ரயில் திட்டங்களை வைத்து CM ஸ்டாலின் அரசியல் செய்வதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கு 2 முறை வந்த PM மோடியை, CM ஸ்டாலின் இங்கேயே சந்தித்திருக்கலாமே? ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு மாநில மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோ-2 திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 23, 2025
ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நின்றது

இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதியின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மகாராஷ்டிராவின் சாங்லியில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


