News April 7, 2025
AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
நடிகர் கமல்ஹாசனின் சொத்து இவ்வளவு கோடியா..!

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக திரையில் கோலோச்சி வரும் அவர், சுமார் ₹450 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் ஆடம்பரமான வாழ்க்கையின் பட்டியலை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து என்னென்ன சொத்துக்களை கமல் வைத்துள்ளார் என பாருங்க.
News November 7, 2025
SIR-க்கு எதிரான திமுகவின் வழக்கு நவ.11-ல் விசாரணை

SIR பணிகள் கடந்த 4-ம் தேதி தமிழகத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, வழக்குத்தொடர தீர்மானம் இயற்றப்பட்டது. இதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், வரும் 11-ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
News November 7, 2025
விஜய் நடத்தியது பித்தலாட்டம்: வைகோ

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை, சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது பித்தலாட்டம் என்று வைகோ விமர்சித்துள்ளார். சம்பவம் நடந்தபோது விஜய் ஏன் திருச்சியில் தங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, உயிரிழப்பு செய்தி அறிந்ததும் சென்னை ஓடிச்சென்று விட்டதாக விமர்சித்துள்ளார். யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என CM பேசிய பின்பும், சகட்டு மேனிக்கு பேசியுள்ளதாக சாடியுள்ளார்.


