News October 20, 2025
நடிகை பிரியங்கா மோகன் கர்ப்பமா? CLARITY

நடிகை பிரியங்கா மோகன், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோஸை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதுவரை அவர் திருமணம் செய்யாத நிலையில், இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பவன் கல்யாணுடன் அவர் நடித்த ‘OG’ படத்தின் போட்டோஸை அவர் பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் அவரது பதிவுக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
ராஜ்யசபா வேட்பாளர் எல்.கே.சுதீஷ்: பிரேமலதா

தேதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவுள்ளதாக பிரேமலதா அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கும், காங்கிரஸுக்கும் தலா ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இதில் காங்., சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடும் நிலையில், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
News March 5, 2026
மகளிர் உரிமைத் தொகை.. மேலும் 2 மகிழ்ச்சி செய்தி

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், முதல் அறிவிப்பாக இது குறித்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பம் எப்போது விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
News March 5, 2026
விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.


