News October 24, 2025

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டாரா?… CLARITY

image

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. அவரது மகள் ஜோவிடாவின் இன்ஸ்டா பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ததே அதற்கு காரணம். தந்தை லிவிங்ஸ்டனுடன் இருக்கும் வீடியோவை ஜோவிடா பதிவிட, ‘உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என அவர் கேட்டார். இதனால் கடுப்பான ஜோவிடா, நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக அல்லவா நினைத்தேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News

News October 25, 2025

Spam Call-கள் எரிச்சலூட்டுதா? இந்த ட்ரிக்ஸ் போதும்!

image

கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வாங்கிக்குறீங்களா என அடுத்தடுத்து வரும் Spam call அழைப்புகள் உங்களை வெறுப்பேற்றினால், இதை பண்ணுங்க ✱போன் Settings -> Caller ID & Spam-க்கு செல்லுங்கள் ✱அதில், ‘Filter spam calls’-ஐ On செய்து வைத்து கொள்ளுங்கள். இது பொதுவாக அனைத்து போன்களிலும் இருக்கும் ✱அல்லது TRAI-க்கு ‘START 0’ என 1909 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யுங்கள் போதும். SHARE IT.

News October 25, 2025

காஸா ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு இந்தியா நன்றி

image

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.

News October 25, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. நிறைவேறாத கடைசி ஆசை

image

நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகன் <<18081336>>பூபதியின்<<>> மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1000 படங்களில் தனது அசாத்திய நடிப்பால் பெரும் புகழ்பெற்ற மனோரமா, தான் எவ்வளவு முயன்றும் தனது சொந்த மகனை சினிமாவில் ஜொலிக்க வைக்க முடியவில்லை. பூபதி, சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் பிரபலமடையவில்லை. இதனால், மனோரமாவின் கடைசி ஆசையும் மண்ணில் புதைந்துவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!