News September 4, 2025
சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேனா ஏபி டி?

21-ம் நூற்றாண்டின் சிறந்த ODI பேட்ஸ்மேன்கள் பட்டியலை ஏபி டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், விராட் கோலிக்கு நம்பர் 1 இடத்தை வழங்கிய அவர், சச்சினுக்கு 4-வது இடத்தை கொடுத்துள்ளார். ஆனால், அடுத்த அவர் செய்தது தான் சச்சின் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது. சச்சினை விட தானே சிறந்த பேட்ஸ்மேன் என தனக்கு 2-ம் இடத்தை வழங்கியுள்ளார். மேலும், இந்த பட்டியலில் ரோஹித் 6, தோனி 7-ம் இடத்திலும் உள்ளனர்.
Similar News
News March 6, 2026
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

1 முதல் 9-க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3-ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3-ஐ கூட்டுங்கள். அந்த விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.
News March 6, 2026
PM KISAN திட்டத்தின் தவணை ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) மார்ச் 13-ம் தேதி டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அசாமில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி, இதற்கான நிதியை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, pmkisan.gov.in இணையதளம் சென்று Know Your Status ஆப்சன் மூலம் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.
News March 6, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


