News October 5, 2025

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஆதார் ஏற்பு?

image

ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருதமுடியாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது (SIR) ஆதார் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். முன்னதாக, பிஹார் SIR-ன் போது, ஆதாரை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், அவை குடியுரிமைக்கான சான்று இல்லை என SC தெரிவித்து இருந்தது.

Similar News

News October 5, 2025

தீபிகா படுகோன் கேரக்டரில் சாய் பல்லவி?

image

‘கல்கி 2’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் சமீபத்தில் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய சுமதி கேரக்டரில், சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இப்படத்தின் படப்பிடிப்பு 2026-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ‘ராமாயணா’ படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, ‘கல்கி’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

News October 5, 2025

உங்கள் பெயரின் முதல் எழுத்து எது? காத்திருக்கும் அதிர்ஷ்டம்

image

ஜோதிடத்தின் படி எந்த எழுத்தில் பெயர் தொடங்கினால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம். A-தலைமை பண்பு, B-அன்பு, C-துடிப்பு, D-ஒழுக்கம், E-படைப்புத்திறன், F-கோபம், G-பரிபூரணவாதி, H-இயற்கை விரும்பி, I-புதுமைவாதி, J-பலம், K-ரொமான்டிக், L-கவனம், M-பொறுமை, N-சுதந்திரம், O-ஒழுக்கம், P-நகைச்சுவை, Q-தைரியம், R-உழைப்பு, S-புகழ், T-நிர்வாகத்திறன், U-புத்திசாலி, V-வெற்றி, W-வசீகரம், X-துணிவு, Y-தனிமை, Z-கண்ணியம்.

News October 5, 2025

‘விஜய் செய்தது தவறு’

image

கரூர் துயர சம்பவத்தின்போது விஜய் செய்தது தவறு என பிரேமலதா சாடியுள்ளார். கரூருக்கு குறித்த நேரத்திற்கு விஜய் செல்லவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், மக்கள் காத்து கிடக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லாமல் கடமை உணர்வை தவறவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்தை அண்ணன் எனக் கூறும் விஜய், அவர் என்ன செய்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என பிரேமலதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!