News October 8, 2025
அண்ணாமலை தலைமையில் உருவாகிறதா தனி கூட்டணி?

நயினாருடன் பனிப்போர், EPS-வுடனான பழைய பகை உள்ளிட்டவை காரணமாக தனிகட்சி தொடங்க அண்ணாமலை மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்காக, டிடிவி, OPS, அன்புமணி, ஜான் பாண்டியனை அவர் ரகசியமாக சந்திக்கிறாராம். அதிமுகவை கைப்பற்றணும் என தினகரனும், அரசியல் ஆளுமை ஆகலாம் என அண்ணாமலையும் போடும் கணக்கே இதற்கு காரணம் என்கின்றனர். இதை அறிந்தும் டெல்லி தலைமை அமைதி காப்பதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
Similar News
News October 8, 2025
கரூர் துயரம்.. கண்ணீர் சிந்திய விஜய்

கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். குறிப்பாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துருவ் விக்னேஷின் அத்தையுடன் பேசியபோது, குழந்தை புகைப்படத்தை பார்த்துக் கண்ணீர் சிந்தியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் தாயார் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதை அறிந்த அவர், மேலும் வேதனையடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
News October 8, 2025
விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவ ராஜ்குமார்

விஜய் தனது அரசியல் பயணத்தில் யோசித்து நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிவ ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பேச்சு நன்றாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், கரூர் துயர் ஒரு நேரக்கூடாத நிகழ்வு என்றும், அதனால் வருத்தமடைந்ததாகவும் கூறினார்.
News October 8, 2025
இதில் உங்க சாய்ஸ் எது?

நீண்ட கால சேமிப்பு தொடங்க விரும்புபவர்களுக்கு, எப்படி சேமிக்கலாம், எதில் முதலீடு செய்யலாம், என்று பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். ஆரம்பத்தில், பெரிய ரிஸ்க் எடுக்காமால், அரசு ஆதரவு உள்ள பாதுகாப்பான சில முதலீடுகளை செய்யலாம். அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து சேமிப்பை தொடங்குங்கள்.