News April 19, 2025
திருமணம் ஆகாமலே பிரபல நடிகை கர்ப்பமா?

அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் பகிர்ந்துள்ள போட்டோ நெட்டிசன்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த போட்டோவில் அவர், ‘Baby bump’ உடன் இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நடிகை அமிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழில் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார்.
Similar News
News December 10, 2025
மதுரை: போட்டித் தேர்வர்களுக்கு இனிப்பான செய்தி.!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.
News December 10, 2025
வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.


