News January 8, 2025
திமுக அனுதாபிக்கு அவ்வளவு செல்வாக்கா? வானதி கேள்வி

திமுகவின் அனுதாபி சக்தி வாய்ந்த அமைச்சருடன் எப்படிப் போட்டோ எடுக்க முடியும் என பாஜகவின் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை; திமுகவின் ஆதரவாளர் என CM ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
Similar News
News January 15, 2026
0% மார்க் எடுத்தாலும் டாக்டருக்கு படிக்கலாம்!

NEET PG 3-ம் கட்ட கலந்தாய்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 800 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவு, EWS- 7% (103 மதிப்பெண்கள்), SC/ST/OBC – 0% (-40 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்ளதால் -40 மதிப்பெண்கள் எடுத்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 18,000 முதுகலை மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்கவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News January 15, 2026
புத்தர் பொன்மொழிகள்

*நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும். *நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன அல்லது செய்தவற்றின் விளைவாகும். *எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விசயங்களுக்காக கவலைப்பட வேண்டும். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.
News January 15, 2026
ரோஹித்தை பின்னுக்கு தள்ளி NO.1 ஆன கோலி!

நியூஸி.,க்கு எதிரான முதல் போட்டிக்கு பிறகு ODI பேட்ஸ்மன் தரவரிசை பட்டியலை ICC அப்டேட் செய்துள்ளது. அதில், உலகின் நம்பர் 1 ODI பேட்ஸ்மனாக ரோஹித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அவர் இதுவரை 11 முறை நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். மேலும், முதலிடத்தில் இருந்த ரோஹித் 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.


