News August 3, 2024
ஒருநாள் என்பது 25 மணி நேரமா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

பூமியில் இருந்து நிலவு விலகிச்செல்வதாக அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலை ஆய்வாளர் குழு அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவு ஆண்டுதோறும் 3.8 செ.மீ. அளவிற்கு விலகிச்செல்கிறது. இதனால் பூமியில் நாட்களின் நேரம் மாறுபடலாம். அதாவது இதே வேகத்தில் நிலவு விலகிச்சென்றால், அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளனர்.
Similar News
News October 20, 2025
தீபாவளி.. பூஜை செய்ய நல்ல நேரம் எது தெரியுமா?

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீப ஒளி திருநாளில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பஞ்சாங்கத்தின் படி, காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து நீராடி விட வேண்டும். அதே போல, காலை 9:10 மணி முதல் 10:20 மணிக்குள் பூஜை செய்வது வீட்டிற்கு நற்பலன்களை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News October 20, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்போர் இதை பாருங்க

*பட்டாசுகளை வாயில் வைத்தோ (அ) கையில் வைத்தோ வெடிக்கக்கூடாது. *மின்கம்பங்கள் அருகே வெடிக்க வேண்டாம். *வாகனத்திற்கு மேல் (அ) உள்புறம் வைத்து வெடிப்பது ஆபத்து. *பட்டாசு வெடிக்கும்போது அருகே சானிடைசர் வைத்திருக்க வேண்டாம். *பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால், எண்ணெய் தடவாதீர்கள்; டாக்டரிடம் செல்லுங்கள். *தீப்பெட்டிக்கு பதிலாக அகர்பத்தி, மெழுகுவர்த்திகளை பயன்படுத்தி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்.
News October 20, 2025
BREAKING: தேர்தல் கூட்டணி.. விஜய் எடுத்த புதிய முடிவு

2026 தேர்தலில் TVK-வுக்கான ஆதரவு, யாருடன் கூட்டணி என்பது குறித்து சர்வே நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதில், வாக்காளர்களின் மனநிலை, சாதி செல்வாக்கு, இளைஞர்களின் ஆதரவு, அரசியல் கட்சிகளின் தற்போதைய பிம்பம் ஆகிய முக்கிய விஷயங்கள் இடம்பெறவுள்ளன. 1 மாதத்திற்குள் இதனை முடித்துவிட்டு கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளாராம். ADMK-TVK கூட்டணி அமைய உள்ளதாக பேசப்பட்ட நிலையில், இந்த புதிய முடிவை எடுத்துள்ளார்.