News February 4, 2025
TN முழுவதும் 144 தடையா? அண்ணாமலை கொதிப்பு

தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல பாஜகவினர் கைது செய்யப்படுவதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக விரோதமாக அரசு நடந்துக்கொள்வதாக சாடிய அவர், கைது செய்தவர்களை உடனே விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் நடத்த இருந்த போராட்டத்தை தடுக்க, மதுரை முழுவதும் 144 தடை விதிக்கப்பட்ட நிலையில், BJP தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 7, 2025
பாக்.,யிடம் தோல்வியடைந்தால் பொறுமை போய்டும்: சேவாக்

எப்போதெல்லாம் பாக்.,க்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைகிறோமோ, அப்போதெல்லாம் தன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று சேவாக் கூறியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் தனது பொறுமையை இழந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இந்த டென்ஷனுக்கு காரணம், பாக்., உடனான கிரிக்கெட்டில் அவருக்கு இருந்த ஒரு Luck & Unlucky தான். ஏனென்றால், பாக்.,க்கு எதிராக சேவாக் விளையாடியபோது 17 வெற்றி, 21 தோல்விகளை இந்தியா சந்தித்துள்ளது.
News September 7, 2025
அபர்ணா தாஸின் ஆல்டைம் ஸ்டன்னிங் லுக்ஸ்

கண்களாலேயே தனது உள்ளார்ந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவதில் கெட்டிக்காரர் தான் அபர்ணா தாஸ். ஸ்மைலிங்கான லுக், ஸ்டன்னிங் காஸ்ட்யூம் & லைட் மேக்கப் உடன் அவர் வெளியிட்ட போட்டோஸுக்கு ரசிகர்கள் ஹார்ட்ஸை (ஹார்ட்டின்கள்) கொடுத்து வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ படம், அவரை குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது எனலாம். அபர்ணாவிடம் உங்களுக்கு பிடித்தது எது?
News September 7, 2025
TET தேர்ச்சி கட்டாயம்: ஆக்ஷனில் பள்ளிக்கல்வித்துறை

பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று SC தீர்ப்பளித்தது. இதனால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியானது. ஆனால், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.