News February 12, 2025

உங்க SBI கணக்கில் ₹236 பிடிக்கப்பட்டுள்ளதா?

image

டெபிட் கார்டு பயனர்களுக்கு, SBI வங்கி ஆண்டு பராமரிப்புக் கட்டணம் விதிப்பது தெரியுமா? டெபிட் கார்ட் வகையை பொறுத்து, கட்டணம் இருக்கும். Classic/Silver/Global Contactless Cards-க்கு ₹236 (₹200+18%GST) கட்டணமும், Gold/Combo/My Card (Image) Cards-க்கு ₹250+GST-யும், Platinum Card-க்கு ₹325+GST-யும், Pride/Premium பிசினஸ் Cards-க்கு ₹350+GST-ம் கட்டணம் பிடிக்கப்படும். பிற வங்கிகளிலும் இக்கட்டணம் உண்டு.

Similar News

News September 10, 2025

SCIENCE: டாக்டர்கள் நாக்கை நீட்ட சொல்வது ஏன் தெரியுமா?

image

உடலில் எந்த பிரச்னை என்றாலும் அதை கண்ணாடி போல் நமது நாக்கு காட்டிவிடுமாம். உதாரணத்துக்கு, நாக்கு மஞ்சளாக இருந்தால் நீர்சத்து குறைபாடு, நாக்கின் நுனி மட்டும் சிவப்பாக இருந்தால் மன அழுத்தம், நாக்கு வெள்ளையாக இருந்தால் நோய்தொற்று, அடி நாக்கு சிவப்பாக இருந்தால் சுவாசப் பிரச்னைகள் இருப்பதாக அர்த்தமாம். இதனால்தான் ஹாஸ்பிடலுக்கு சென்றாலே நாக்கை காட்டும்படி மருத்துவர் கேட்கிறார். SHARE.

News September 10, 2025

நேபாள இடைக்கால அரசு தலைவர் தேர்வு

image

நேபாளத்தின் இடைக்கால அரசு தலைவராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊழல் முறைகேடு, சமூக வலைதளங்களுக்கு தடை ஆகியவற்றை எதிர்த்து அந்நாட்டில் இளைஞர்களின் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த சர்மா ஒலி, குடியரசு தலைவர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது இடைக்கால அரசு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News September 10, 2025

கள் இறக்க அனுமதி தராது ஏன்? EPSயிடம் விவசாயி கேள்வி

image

EPS தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. உங்கள் ஆட்சியில், கள் இறக்க அனுமதி தராதது ஏன் என கேட்டு விவசாயி ஒருவர் அதிமுகவினரிடம் வாக்குவாதம் செய்தார். உடனடியாக தலையிட்ட EPS, கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மக்களுக்கு எது நல்லது என பார்த்துதான் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும், தனிநபரின் லாப நஷ்டத்தை பார்க்கக்கூடாது என்றும் விளக்கமளித்தார்.

error: Content is protected !!