News October 24, 2024

இர்ஃபான் விவகாரம்: மருத்துவமனைக்கு 10 நாள் தடை

image

விதிமுறைகளை மீறியதற்காக தனியார் மருத்துவமனை செயல்பட 10 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்துள்ளது. இதனை வீடியோவாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மருத்துவமனைக்கு 10 நாள் தடையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Similar News

News January 20, 2026

நாகை: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

image

நாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியில் நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான நீலாயதாக்ஷி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. மகிழ்ச்சியான செய்தி

image

ஜன நாயகன் பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை <<18907367>>சென்னை ஐகோர்ட்<<>> தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ள நிலையில், படம் விரைவில் வெளியாகும் என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. நாளை (அ) நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் அளித்த புகாரின்பேரில் படத்தின் ரிலீஸை நிறுத்துவது சட்ட ரீதியாக தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 20, 2026

தென்னாப்பிரிக்காவுடன் மல்லுக்கட்டும் இந்தியா!

image

ஜூனில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்.17-ல் தொடங்கி ஏப்.27-ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை ஃபைனலுக்கு பிறகு இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ளதால், இந்த டி20 தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

error: Content is protected !!