News December 27, 2024
ஈடு செய்ய முடியாத இழப்பு: EPS

மன்மோகன் சிங் மறைவுக்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும், திறமையான நிர்வாகியாகவும், ஒரு முன்மாதிரியான அரசியல்வாதியாகவும், அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Similar News
News July 9, 2025
பும்ராவுக்கு போட்டியாக ஆர்ச்சரை களமிறக்க வாய்ப்பு

இந்தியா – இங்கி., எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இணைவார் என தகவல்கள் உள்ளன. அதைப்போன்று இந்திய அணிக்கு செக் வைக்கும் வகையில் இங்கி., அணியில் ஆர்ச்சரை களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ச்சர் நல்ல உடற்தகுதியுடன் தயாராக இருப்பதாக இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லமும் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
News July 9, 2025
நான் கைதாகவில்லை: சௌபின் சாஹிர் விளக்கம்

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடியை கடனாக பெற்றுக்கொண்டு அசல் தொகையோ, 40% லாபத்தையோ <<16994564>>சௌபின் சாஹிர்<<>> தராததால் அவர் கைதாகி சொந்த ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய சௌபின் சாஹிர், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும், தன் பக்கம் நியாயங்களை உணர்த்தும் வகையிலான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, நீதிமன்றத்திடம் சமர்த்திருக்கிறேன், விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.