News June 27, 2024
அனைத்து ரேஷன் கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும், 2,92 லட்சம் ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் பயன்பெற அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் படி நடப்பாண்டு மாவட்டம் முழுவதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதால், தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன் கிரையம் செய்த நில உரிமையாளர்கள் பயன்பெறலாம்.
News September 18, 2025
256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு: அண்ணாமலை

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால் அவற்றை கைவிட அரசு முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகிருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதியின் சிலை வைத்தது மட்டும்தான் எனவும் விமர்சித்துள்ளார்.
News September 18, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.