News June 16, 2024

அயர்லாந்து அடுத்தடுத்து 6 விக்கெட்

image

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் அயர்லாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 7 ஓவரில் 34/6 எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் 10 ரன்களுக்கு அவுட் ஆகினர். பாக்., அணியில் ஷஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டை கைப்பற்றினார்.

Similar News

News September 13, 2025

வேன்களை மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதி

image

குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை கிடைக்கும் நோக்கில், 12-16 இருக்கைகள் கொண்ட வேன்களை (Maxi Cab) மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த வேன்களில் நின்று செல்ல பயணிகளுக்கு அனுமதியில்லை. அதேநேரம், நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ., உயரம் இருக்கலாம். அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் பஸ்கள் 150 – 200 செ.மீ., உயரம் இருக்கலாம்.

News September 13, 2025

சளி தொல்லைக்கு இந்த டீ ஒன்றே போதும்!

image

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள் ? உங்களுக்காக அருமருந்து இதோ! வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடாதோடை இலை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கிவிட்டு தேன் கலந்து குடியுங்கள் போதும். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வும் வரும். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

தாயாகும் தருணத்திற்காக காத்திருக்கும் நடிகை சமந்தா!

image

தான் தாயாக வேண்டும் என்ற கனவு அப்படியேதான் உள்ளதாக சமந்தா உணர்வுப்பூர்வமாக கூறியுள்ளார். வயதாகி கொண்டே போகிறது, சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் என்ற ரசிகர்களின் கோரிக்கைக்கு அவர் பதிலளித்துள்ளார். ஒரு பெண் நினைத்தால், அவள் தாயாக முடியாத நேரம் என எதுவும் இல்லை என்ற அவர், தாய்மை என்ற வரம் தனக்கும் கிடைக்கும் என்று நம்புவதாகவும் பேசியுள்ளார். அந்த அழகான தருணத்திற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!