News March 15, 2025
IS அமைப்பின் முக்கியத் தலைவரை காலி செய்த ஈராக்

ஈராக் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக நடத்திய தாக்குதலில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு கதீஜா கொல்லப்பட்டார். உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈராக் மற்றும் சிரியா தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடர்வதாக ஈராக் பிரதமர் முகமது சூடானி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 15, 2025
பவன் அப்போது பிறந்திருக்கவே மாட்டார்: TKS இளங்கோவன்

தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள் என பவன் கல்யாண் பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார். ‘இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதற்காக 1968-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது பவன் பிறந்திருக்கவே மாட்டார்’ என அவர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
சஜி மரணத்திற்கு விஜய் இரங்கல்

தவெகவின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த சஜி காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் X போஸ்ட் செய்துள்ளார். என் மீதும் கழகத்தின் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்று சஜியை பாராட்டியிருக்கும் விஜய், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சஜி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
News March 15, 2025
பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி!

இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் சினிமாக்களை மட்டும் இந்தியில் டப் செய்யலாமா? என பவன் கல்யாண் கேட்ட கேள்விக்கு, கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மொழித் தடைகளை கடந்து திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் தங்களுக்கு உதவுவதாக கனிமொழி தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன் ‘GO BACK HINDI’ என பவன் கல்யாண் போட்ட பதிவையும், தனது பதிலடிக்கு கீழே கனிமொழி பகிர்ந்துள்ளார்.