News May 20, 2024
ஈரான் அதிபர் ரைசி உயிரிழப்பு?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அரசு தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. மூடுபனி காரணமாக ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
Similar News
News September 14, 2025
சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்

சிம்பு – வெற்றிமாறன் படத்தில் பணியாற்றுவதை ஜிவி பிரகாஷ் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் சிம்பு நடிக்கவுள்ள வடசென்னை யுனிவர்ஸ் படத்தின் ப்ரோமோ வெளியானது. இதன் மிரட்டலான பின்னணி இசையை கேட்டு இசையமைப்பாளர் யாராக இருக்கும். சந்தோஷ் நாராயணனா ? ஜிவி பிரகாஷா என ரசிகர்கள் விவாதித்தனர். இந்நிலையில், அப்படம் எடுக்கப்பட்டால் தானே இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
News September 14, 2025
விஜய்யின் பரப்புரை ரத்து

பெரம்பலூரில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. விஜய் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். ஆனால் மக்கள் கூட்டத்திற்கு இடையே அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கு விஜய்க்கு நள்ளிரவுக்கு மேல் ஆனது. இதனால் வேறு வழியின்றி பெரம்பலூர் பரப்புரை ரத்தானது. விஜய்யின் பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
News September 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 14, ஆவணி 29 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை