News October 21, 2025
டிரம்பின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த ஈரான்

ஈரான் – அமெரிக்கா இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை 5 சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப் மீண்டும் ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை ஈரானின் தலைவர் காமேனி நிராகரித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $80(இந்திய மதிப்பில் ₹7,375) குறைந்து $5,150 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $4 குறைந்து $85 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 12, 2026
தமிழ்நாட்டை ATM-ஆக நினைக்கும் திமுக: PM மோடி

தமிழ்நாட்டின் வளங்களை ஒரு குடும்பம் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதாக திமுகவை PM மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டை ATM போல் நினைத்து சுரண்டுவதாக கூறினார். அமைச்சர்கள் மாறலாம், MLA-க்கள் மாறலாம் ஆனால், அதிகாரம் மட்டும் ஒரு குடும்பத்திடம் சிக்கித் தவிப்பதாக சாடினார்.
News March 12, 2026
திமுக மீது வேல்முருகன் அப்செட்டில் இருக்கிறாரா?

திமுக கூட்டணியில் இருப்பவர்கள் 2 இலக்கத்தில் தொகுதிகளை கேட்க, தன்பங்கிற்கு 10 தொகுதிகளை கேட்டு அறிவாலயத்திடம் வேல்முருகன் லிஸ்ட் கொடுத்திருக்கிறாராம். ஆனால், விரும்பும் தொகுதிகளை கேட்டால் 1 தொகுதி, தாங்கள் கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் 2 தொகுதிகள் கிடைக்கும் என திமுக தலைமை ரிப்ளை கொடுத்திருக்கிறது என்கின்றனர். இதனால், வேல்முருகன் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


