News April 15, 2024
ஈரானிடம் அணுகுண்டுகள்?

ஏவுகணை, ட்ரோன் தாக்குதலுக்கு பிறகும் இஸ்ரேல் அமைதி காப்பதன் பின்னணியில், ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முதல்முறையாக நேரடியாக தாக்குதல் நடத்தியும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதை வைத்து ஈரானிடம் அணுகுண்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிப்பதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News November 27, 2025
காஞ்சி: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

உத்திரமேரூர் அருகே அ.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, விஜய் நேற்று(நவ.26) அவரது வீட்டின் அறை ஒன்றில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
KAS மனவருத்தத்தில் இருந்தார்: TTV தினகரன்

அதிமுகவில் இருந்து நீக்கியதில் இருந்தே செங்கோட்டையன் மனவருத்தத்தில் இருந்ததாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனை கொங்கு நாட்டு தங்கம் என்றுதான் சொல்வார்கள் என கூறிய TTV, கட்சியில் பம்பரம்போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், செங்கோட்டையன் விஜய் பக்கம் செல்வது யாருக்கு பின்னடைவு என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் EPS-ஐ மறைமுகமாக சாடினார்.
News November 27, 2025
சபரிமலை அன்னதானத்தில் மெனு மாற்றம்

நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அறிவித்துள்ளது. இதன்படி, வழக்கமான கஞ்சி, சாதாரண சாப்பாட்டுக்கு பதில், பாயசம், அப்பளத்துடன் உணவு வழங்கப்படும். இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.


