News October 27, 2024

இஸ்ரேலை மீண்டும் தாக்காமல் இருக்க ஈரான் நிபந்தனை

image

இஸ்ரேலை மீண்டும் தாக்காமல் இருக்க ஈரான் நாடு நிபந்தனை விதித்துள்ளது. அக். 1இல் ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் தாக்காமல் இருக்க காசா, லெபனானில் இஸ்ரேல் சண்டை நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 15, 2026

தென்காசியில் உச்சத்தை தொட்ட கரும்பு விலை

image

தமிழர்கள் திருநாளான பொங்கலை முன்னிட்டு வீடுகளில் மஞ்சள் கரும்பு காய்கறிகள் உள்ளிட்டவைகள் வைத்து சூரியனுக்கு படையல் இட்டு பொங்கல் விடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு அதிக அளவில் விற்பனையானது. இந்நிலையில் நேற்று கரும்பு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இன்று ஒரு கரும்பு 80 ரூபாய் வரை விற்பனையானனது.

News January 15, 2026

திமுக அரசின் மீதான கரும்புள்ளி: நயினார்

image

ஆசிரியர் விஷம் குடித்து <<18857511>>தற்கொலை <<>>செய்துகொண்டது வேதனையளிப்பதாக நயினார் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘உங்க கனவ சொல்லுங்க’ என விளம்பர நாடகம் போடும் CM ஸ்டாலின், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவுதான் இந்த துர்மரணம். இது திமுக அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு 2026-ல் முடிவு கட்டப்படும் என்றார்.

News January 15, 2026

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திருவள்ளுவர் தினமான நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, டாஸ்மாக், பார்கள் திறந்தாலோ, கள்ளச்சந்தையில் விற்றாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று இரவு 10 மணி முதல் ஜன.17 பிற்பகல் 12 மணி வரை மது வாங்க முடியாது. இதன் காரணமாகவும், பொங்கல் பண்டிகை என்பதாலும், இன்று டாஸ்மாக் கடைகள் திறந்த உடனே கூட்டம் அலைமோதுகிறது.

error: Content is protected !!