News April 15, 2024
இந்தியாவுக்கு ஈரான் அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இஸ்லாமிய புரட்சி படையினர் சிறை பிடித்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை தொடர்பு கொண்டு பேசியது. இதன் விளைவாக இந்திய மாலுமிகளை இந்திய அதிகாரிகள் சந்திக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
Similar News
News November 24, 2025
1.3 கோடி ஆண்டு பழமையான ஆமைக்கு ஷகீரா பெயர்!

புதிய இனம் கண்டறியப்பட்டால் பொதுவாக அறிவியல் முறைப்படி பெயர் வைக்கப்படும். ஆனால், கொலம்பியாவில் உள்ள தடாகோவா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 1.3 கோடி ஆண்டுகள் பழமையான ஆமை படிமத்துக்கு, கொலம்பிய ராப் பாடகி ஷகீராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷகீராவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ஆராய்ச்சியாளர் எட்வின் கேடனாவின் வாக்குறுதியின் பேரிலும் ‘Shakiremys colombiana’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
News November 24, 2025
பட்டியலின மக்களுக்கும் திமுக செய்யும் துரோகம்: அன்புமணி

SC ஆணையிட்டு ஓராண்டாகியும் பட்டியலின சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் என அன்புமணி கேட்டுள்ளார். இதேபோல வன்னியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கவில்லை என்ற அவர், வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் சமூகநீதி வழங்கக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை எனவும் விமர்சித்துள்ளார். இதனால், அநீதி இழைக்கும் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
News November 24, 2025
BREAKING: பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்

பாலிவுட்டின் ‘ஹீ மேன்’ஆக கொண்டாடப்பட்ட தர்மேந்திரா (89) காலமானார். உடல்நலக்குறைவால் மும்பை பிரீச் கேண்டி தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 12-ம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதற்கு உடனே அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார். இந்நிலையில், சற்றுநேரத்திற்கு முன் அவர் உயிரிழந்துள்ளார்.


