News February 13, 2025

பாலியல் புகாரில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

image

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2025

இந்தியாவை குறிவைக்கும் MNC நிறுவனங்கள்

image

MNC நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு துடிப்பான வணிக சந்தையாக மாறியுள்ளது. கோகோ கோலா, ஹார்லி டேவிட்சன், ஆப்பிள், கோல்கேட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, உலகளவில் டிமாண்ட் குறைந்த நிலையிலும், இந்தியாவில் அவை அதிக வருமானத்தை ஈட்டியிருப்பது, The Economic Times அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

News February 13, 2025

பாஜகவுடன் கைகோர்ப்பதே நல்லது: ஓபிஎஸ்

image

அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கருத்து தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். கட்சியின் 50 ஆண்டுகால விதியை மீறி திருத்தம் செய்ததே அதிமுகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற தீர்ப்பு வருவதற்கு காரணம் என சாடியுள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் வெற்றிக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

கமல்- உதயநிதி திடீர் சந்திப்பு

image

மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசிய புகைப்படங்களை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி மநீமவுக்கு அளிக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. முன்னதாக, அமைச்சர் சேகர்பாபுவும் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

error: Content is protected !!