News March 22, 2025
IPL: இன்றைய போட்டி நடக்குமா? இல்லை நடக்காதா?

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று IPL முதல் போட்டி நடக்கிறது. மழைக்கு வாய்ப்பு இருப்பதால் போட்டி பாதிக்கப்படலாம் என செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில் கொல்கத்தா வானிலை மையம் தரப்பில், மழையால் இன்றைய போட்டிக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருப்பதாகவும், சூரியன் தென்படுவதாகவும் அது கூறியுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
Similar News
News March 23, 2025
‘குஷி’ ஓடவில்லை என்றால் செத்திருப்பேன்: SJ சூர்யா

தனது கேரியரை மாற்றிய ‘குஷி’ படம் குறித்து இயக்குநரும், நடிகருமான SJ சூர்யா சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். குஷியின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த யாருக்கும் படம் பிடிக்கவில்லை என்று கூறிய அவர், ஆனால் ரிலீஸ் ஆனதும் பெரிய ஹிட் அடித்ததாக தெரிவித்தார். ஒருவேளை ரிலீஸ் ஆன பிறகும், படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருந்தால், அந்த வலியால் நான் செத்திருப்பேன் என்றார். உங்களுக்கு‘குஷி’ படம் பிடிக்குமா?
News March 23, 2025
நடிகர் ராகேஷ் பாண்டே உடல் தகனம்

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பாலிவுட் நடிகர் ராகேஷ் பாண்டேவின் உடல் மும்பையில் உள்ள சாஸ்திரி நகரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 1969இல் சினிமாவில் கால் பதித்த ராகேஷ் பாண்டே 2023 வரை ஈஷ்வர், தேவ்தாஸ், தில் சாஹ்தா ஹை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
News March 23, 2025
3 மாதங்களில் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்!

TNல் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தெருவில் நடக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!