News April 10, 2024
IPL: வெற்றியை தொடருமா ராஜஸ்தான்?

ராஜஸ்தான் – குஜராத் இடையேயான 24ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில், ராஜஸ்தான் அணி மட்டும் தான் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. லக்னோ, டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய 4 அணிகளை வீழ்த்தி, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியுடன் மோதவுள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
Similar News
News April 24, 2025
நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (1/2)

நேரு-அயூப்கான் முன்னிலையில் உலக வங்கி மத்தியஸ்தத்துடன் 1960-ல் இந்தியா, பாக். இடையே சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கிழக்கு நதிகளான சட்லஸ், பீயாஸ், ராவி நதிநீர் அனைத்தும் இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் நதிநீர் பாகிஸ்தானிற்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் 33 மில்லியன் ஏக்கர் இந்திய விவசாய நிலமும், 135 மில்லியன் ஏக்கர் பாகிஸ்தான் விவசாய நிலமும் பயனடையும்.
News April 24, 2025
நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (2/2)

மேடான இந்திய பகுதிகளில் உருவாகி கீழ்நோக்கி வரும் இந்நதிகளின் நீரையே பாகிஸ்தான் விவசாயிகள் அதிகம் நம்பி உள்ளனர். பாகிஸ்தானில் குடிநீருக்கும் இந்நீரே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்நீரை இந்தியா வழங்கி வந்தது. தீவிரவாதத்தை தூண்டிவிடுவதை நிறுத்தாததால், தற்போது இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
News April 24, 2025
கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்ததாகவும், பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக திகழ்ந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவருக்கு செய்யும் கவுரவம் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.