News April 8, 2024
IPL: வெற்றிப் பாதைக்கு திரும்புமா CSK?

சென்னை – கொல்கத்தா இடையேயான 22ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்த 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தோல்வியே பெறாத கொல்கத்தா உடன் மோதுவதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
Similar News
News March 28, 2026
BREAKING: தோனிக்கு காயம்!

தோனியை விரைவில் கிரவுண்டில் பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வந்துள்ளது. பயிற்சியின் போது, அவருக்கு கெண்டைக்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால், அடுத்த 15 நாள்களுக்கு ரெஸ்ட்டில் இருப்பார் என்றும், வரும் 30-ம் தேதி RR-க்கு எதிரான மேட்ச்சில் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன், தோனி <<19438278>>தாங்கி தாங்கி<<>> நடந்து வந்த வீடியோ வைரலானது.
News March 28, 2026
மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் செய்கிறாரா விஜய்?

முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய், வரும் 30-ம் தேதி, மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு, பெரம்பூரில் இருந்தே தன் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
இன்னைக்கு ஒரு மணிநேரம் Light off பண்ணுங்க!

மார்ச் 28, 2007-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ‘Earth Hour’ கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்றிரவு 8.30- 9.30 மணி வரை, தேவையற்ற Light-களை Off செய்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, மக்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். உலகில் பசுமையை அதிகரிக்கவும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதையும் இந்த சிறு முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது. நீங்களும் கலந்துக்கோங்க!


