News March 28, 2024

IPL: சூர்யகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார்

image

சூர்யகுமார் யாதவால், இன்னும் ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், தற்போது முழு உடல் தகுதியை பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். தற்போது உடல் நலம் தேறி வரும் அவர், மேலும் ஒரு சில போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 9, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 575
▶குறள்:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
▶பொருள்: கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.

News January 9, 2026

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? குஷ்பு

image

90-களில் எப்படி ரஜினி மிகப்பெரிய நடிகராக இருந்தாரோ அதேபோல் இன்று விஜய் ஸ்டாராக உள்ளார் என குஷ்பு தெரிவித்துள்ளார். அதனால் அவரை காண மிகப்பெரிய கூட்டம் கூடுகிறது என்றும், ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக மாறும் என நிச்சயமாக சொல்லமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டு, மக்களை ஏமாற்றும் வேலை எனவும் சாடியுள்ளார்.

News January 9, 2026

மம்தா பானர்ஜி மீது வழக்கு தொடுத்த ED

image

<<18797106>>IPAC நிறுவன சோதனையின்<<>> போது முக்கியமான ஆதாரங்களை மம்தா எடுத்து சென்றதாக கொல்கத்தா கோர்ட்டில் ED வழக்கு தொடர்ந்துள்ளது. மம்தா ஏராளமான போலீஸ் அதிகாரிகளுடன் வந்த பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்ற வழக்கிற்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து சென்றதாக ED குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே வீட்டில் இருந்து பல ஆவணங்களை அனுமதியின்றி ED எடுத்துச் சென்றதாக I-PAC தலைவர் பிரதீக் குடும்பத்தினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

error: Content is protected !!