News August 25, 2024
IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 13, 2025
கேரளாவில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் இடையே இழுபறி!

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி(LDF), கேரளா ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF) இடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் LDF 3 இடங்களிலும், UDF 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 87 நகராட்சிகளில் UDF-45, LDF-32, NDA-2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
News December 13, 2025
டெல்லி விரைந்த நயினார்.. மீண்டும் இணைகிறாரா OPS?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நயினார் சற்றுமுன் டெல்லி புறப்பட்டு சென்றார். டிச.15-ம் தேதி சென்னை வரும் அமித்ஷா முன்னிலையில், TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, நேற்று முன்தினம் EPS உடன் நயினார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க இன்று டெல்லி விரைந்துள்ளார்.
News December 13, 2025
FLASH: தங்கம் விலையில் மாற்றமில்லை

ஜெட் வேகத்தில் உயர்ந்து நேற்று வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று(டிச.13) மாற்றமின்றி கிராம் ₹12,370-க்கும், சவரன் ₹98,960-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த தங்கம், இன்று மந்த நிலையில் இருப்பதே விலை மாறாததற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இன்று தங்கம் வாங்க நினைத்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


