News March 21, 2024
ஐபிஎல் போட்டிகள் நாளை தொடக்கம்

ஐபிஎல்தொடர், சென்னையில் நாளை தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நாளை கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் இத்தொடர் ஆரம்பமாகிறது. இதையடுத்து இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் தொடக்க போட்டிகள், சென்னையில் நடைபெறுவது இது 5ஆவது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2019 & 2021ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது.
Similar News
News February 12, 2026
மேலும் 1 லட்சம் கலைஞர் கனவு இல்லம்.. TN அரசு அறிவித்தது

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், ₹3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார்.
News February 12, 2026
மோடி அங்கிள் என விஜய் சொல்வாரா? வன்னி அரசு

தமிழகத்தின் உரிமைக்காக பேசக் கூடிய ஒரே கூட்டணி திமுக கூட்டணி தான் என வன்னி அரசு தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய அவர், TN-க்கு பெரும் திட்டங்களை வழங்காத மோடியை பார்த்து மோடி அங்கிள் என விஜய் சொல்வாரா என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் கையை தூக்கி பேசும் இன்னொருவரும் பேச மாட்டார் என சீமானையும் மறைமுகமாக விமர்சித்தார்.
News February 12, 2026
ஸ்டேஷனிலேயே பெண் போலீஸுடன் தனிமை.. VIRAL

உ.பி.,யின் பிஜ்னோர் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே, ஹெட் கான்ஸ்டபிள் & பெண் காவலர் தனிமையில் இருந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், தனிமையில் இருந்த வீடியோவை எடுத்தது யார், ஒருவேளை மிரட்டுவதற்காக வீடியோ எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர். காக்கி உடையின் கண்ணியம் பாதிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


