News April 13, 2025
IPL: ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்..!

ராய்ப்பூர் மைதானத்தில் சற்றுநேரத்தில் (பிற்பகல் 3.30 மணி) தொடங்கும் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியில் பச்சை நிற ஜெர்சியுடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது. நடப்பு சீசனில் 3 போட்டிகளில் வென்றுள்ள பெங்களூரு புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 2 வெற்றிகளை பெற்று ராஜஸ்தான் 7-வது இடம் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் வாகை சூடப் போவது யார்?
Similar News
News December 2, 2025
IPL-க்கு விடை கொடுத்த CSK சாம்பியன்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக EX-CSK வீரர் மோயின் அலி IPL தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக SM-ல் பதிவிட்டுள்ள அவர், கிரிக்கெட் உலகில் புதிய பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2021 மற்றும் 2023-ல் CSK அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மொயின் அலி முக்கியபங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே <<18424665>>பாப் டு பிளெஸ்சிஸும் <<>>இதுபோல அறிவித்திருந்தார்.
News December 2, 2025
பயிர் பாதிப்பு.. ஏக்கருக்கு ₹35,000 வழங்குக: வீரபாண்டியன்

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 2.22 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக இந்திய கம்யூ. கட்சியின் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர்களின் துயர் துடைக்கும் வகையில் ஏக்கருக்கு ₹35,000 இழப்பீடாக தர வேண்டும் என TN அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆடு, மாடு இறப்புக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
News December 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 537 ▶குறள்:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
▶பொருள்: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.


