News April 1, 2025
IPL: பஞ்சாப் vs லக்னோ இன்று மோதல்

நடப்பு ஐபிஎல் சீசனின் 13ஆவது லீக் போட்டியில் இன்று பஞ்சாப், லக்னோ அணிகள் மோத உள்ளன. லக்னோவில் இரவு 7.30 அணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதுவரை விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி கனியை ருசித்த ஸ்ரேயஸ் ஐயரின் பஞ்சாப் அணி, இன்றைய போட்டியிலும் வெல்வதற்கு முனைப்பு காட்டும். அதேவேளையில், விளையாடிய 2 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்றுள்ள ரிஷப் பண்டின் லக்னோ அணி, இந்த போட்டியில் வெல்ல போராடும்.
Similar News
News April 2, 2025
வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

கச்சத்தீவு தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கச்சத்தீவை வைத்து திமுக நாடகம் நடத்தியதாக சாடினார். தேர்தலை வைத்து கச்சத்தீவு தீர்மானத்தை தற்போது திமுக கொண்டு வந்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
News April 2, 2025
‘கடத்தல் நாயகி’யிடம் இருந்து விவாகரத்து கோரும் கணவர்?

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை விவாகரத்து செய்ய அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. தங்கக் கடத்தலில் நடிகை சிக்கி இருப்பதால் கணவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைதானது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
வக்ஃப் மசோதா: அவையை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்

வக்ஃப் வாரிய மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். திமுகவின் ஆர்.ராசா உள்ளிட்டோர் முழக்கமிட்டதை அடுத்து, தனது பேச்சை தொடர முடியவில்லை என ரிஜிஜு முறையிட்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனாலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.