News April 4, 2024
IPL: பஞ்சாப் த்ரில் வெற்றி

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங், பொறுப்புடன் விளையாடி 61 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இது பஞ்சாப் அணிக்கு கிடைக்கும் 2ஆவது வெற்றி ஆகும்.
Similar News
News March 19, 2026
நெல்லை: இனி 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

திருநெல்வேலி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT
News March 19, 2026
தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள்.. நாதக தேர்தல் வாக்குறுதி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை சீமான் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், *சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 தலைநகரங்கள். *வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை. *ஜனாதிபதியை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம். *3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லோக்சபா தொகுதி. *சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
News March 19, 2026
தவெகவுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது? கேட்டார் ஸ்டாலின்

விருப்பமனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அப்போது, பெரும்பாலானோரிடம் உங்கள் தொகுதியில் தவெகவுக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்று ஸ்டாலின் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைப் பொறுத்து இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.


