News April 20, 2024
IPL: கடைசி ஓவரில் அதிக ரன் குவித்த வீரர்கள்

ஐபிஎல் தொடரின் கடைசி (20ஆவது) ஓவரில் அதிக ரன் குவித்த வீரர்கள்: ▶தோனி 99 போட்டிகளில் – 772 ரன்கள், ▶பொல்லார்டு 62 போட்டிகளில் – 405 ரன்கள், ▶ஜடேஜா 75 போட்டிகளில் – 368 ரன்கள், ▶தினேஷ் கார்த்திக் 46 போட்டிகளில் – 292 ரன்கள், ▶ஹர்திக் பாண்டியா 41 போட்டிகளில் – 287 ரன்கள், ▶ரோஹித் ஷர்மா 28 போட்டிகளில் – 257 ரன்கள், ▶ஏ.பி.டிவிலியர்ஸ் 33 போட்டிகளில் – 225 ரன்கள், ▶பிராவோ 41 போட்டிகளில் – 213 ரன்கள்
Similar News
News August 21, 2025
உங்களுக்கு ஒரு ‘குட்டி ஸ்டோரி’

மழை வேண்டி அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று ஒரு கிராமத்தினர் முடிவு எடுத்தனர். திட்டமிட்ட நாளில் அனைவரும் ஓரிடத்தில் கூடி, மிக பயபக்தியுடன் கடவுளிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் குடையுடன் அங்கு வந்தான்….இது தானே நம்பிக்கை!
News August 21, 2025
சற்றுமுன்: கூட்டணியை அறிவிக்கிறார் விஜய்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக பலமான கூட்டணியாக இருக்கும் நிலையில், விஜய் இதுவரை கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்றைய மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News August 21, 2025
மசூதியில் பயங்கரம்: 50 பேர் துடிதுடிக்க கொலை!

நைஜீரியாவின் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில், 30 பேர் துப்பாக்கி சூட்டிலும், 20 பேர் உயிருடன் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். எந்த பயங்கரவாத கும்பலும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. வடமேற்கு & வடமத்திய நைஜீரியாவில் விவசாயிகள் & கால்நடை வளர்ப்பு தொழிலாளர்களுக்கிடையே நிலம் தொடர்பான மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.