News April 15, 2025
IPL: முதலில் பேட்டிங் செய்யும் PBKS

PBKS, KKR இடையேயான இன்றைய IPL போட்டியில் PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். தொடரின் 31ஆவது போட்டியான இது, சண்டிகரில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகளும், இப்போட்டியில் வென்று முதல் நான்கு இடங்களுக்குள் செல்ல முயற்சி செய்யும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Similar News
News April 25, 2025
தக்காளி, சுரைக்காய், சவ்சவ் விலை ரூ.10ஆக சரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.10ஆக குறைந்துள்ளது. இதேபோல், சுரைக்காய், சவ்சவ் விலையும் கிலோ ரூ.10ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. முள்ளங்கி, வெள்ளரிக்காய் ரூ.13ஆகவும், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ருட், காராமணி, பாகற்காய், முருங்கைக்காய், நூக்கல் ஆகியவை கிலோ ரூ.20ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.18ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.30ஆகவும் சரிந்துள்ளது.
News April 25, 2025
துணைவேந்தர்கள் மாநாடு; பலத்த பாதுகாப்பில் ஊட்டி

ஊட்டி ராஜ்பவனில் இன்றும் நாளையும் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அதேநேரம், கவர்னரைக் கண்டித்து காங்கிரஸ், தபெதிக ஆகியவை போராட்டம் அறிவித்துள்ளதால், மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News April 25, 2025
செந்தில் பாலாஜி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவு செய்ய செந்தில் பாலாஜிக்கு SC 28ம் தேதி வரை கெடு விதித்தது. இன்று 25-ம் தேதியாகும். ஆதலால், செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாள்களே அவகாசம் உள்ளது. பெரும்பாலும் அவர் ராஜினாமா செய்யவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் செந்தில் பாலாஜி ஆலோசித்து வருவதாகவும், இன்று அல்லது நாளை ராஜினாமா குறித்து அவர் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.