News April 5, 2024
ஐபிஎல் ஆரஞ்ச் நிற தொப்பி: கோலி தொடர்ந்து முதலிடம்

ஐபிஎல் ஆரஞ்ச் நிற தொப்பியை வெல்லும் வீரர்கள் பட்டியலில் ஆர்சிபி வீரர் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை நடந்த போட்டிகளில் 203 ரன்களை விளாசியுள்ளார். அவருக்கு பிறகு 2வது இடத்தில் 181 ரன்கள் குவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்கும், 3வது இடத்தில் 167 ரன்கள் எடுத்துள்ள ஹைதராபாத் வீரர் கிளாசன் உள்ளனர். குஜராத் வீரர் ஷூப்மன் கில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Similar News
News April 21, 2025
ராசி பலன்கள் (21.04.2025)

➤மேஷம் – தாமதம் ➤ரிஷபம் – உதவி ➤மிதுனம் – மறதி ➤கடகம் – நஷ்டம் ➤சிம்மம் – பெருமை ➤கன்னி – முயற்சி➤துலாம் – ஆதாயம் ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – பயம் ➤மகரம் – பரிசு ➤கும்பம் – சினம் ➤மீனம் – பாராட்டு.
News April 21, 2025
நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை

நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெனியூ மாகாணத்தில் கால்நடை மேய்ப்பர்கள், விவசாயிகள் இடையே கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. கிறிஸ்தவ மதத்தினர் விவசாய தொழிலிலும், கால்நடை மேய்க்கும் தொழிலில் இஸ்லாமியர்களும் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 56 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
News April 21, 2025
BREAKING: மும்பை அணியிடம் வீழ்ந்தது CSK

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(53), ஷிவம் துபே (50) அரைசதம் அடித்தனர். தொடந்து ஆடிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அரைசதம் அடித்த ரோஹித்(76) மற்றும் சூர்யகுமார் யாதவ்(68) அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்ததால் ஃப்ளேஆஃப் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.